கடுமையான செவ்வாய் தோஷத்தால் பெண்களுக்கு பாதிப்பா? தடுக்க எளிய பரிகாரம்
செவ்வாய் தோஷம் கொண்ட பெண்களுக்கு திருமணம் ஏற்படுவதில் பல தடங்கள் உண்டாகும். அதிலும், பெண்களுக்கு செவ்வாய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அதன்படி என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
வக்ர செவ்வாய்
வக்ர செவ்வாய் ஆனது பெண்களுக்கு மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறலாம். இவர்களுக்கு தசாபுத்தி அந்தரங்க காலங்களில் முன் கோபம் அதிகமாக ஏற்படும்.
உடன் பிறந்த சகோதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்காது. வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்.
பரிகாரம்
பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிப்பட்டு வர அனைத்து தோஷமும் நீங்கி மன அமைதி பெறும்.
கிரக சேர்க்கை
கிரக சேர்க்கையானது செவ்வாய், சனி, செவ்வாய்- ராகு ஆகிய சேர்க்கையால் திருமணம் வாழ்வை சிறக்க வைக்காது. செவ்வாய்- சனியும் செவ்வாய் பகை கிரகங்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில் ராசியில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலே பிரச்சினை தான்.
இவர்களுக்கு, மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்சினை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் கருவளையம் என பல பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும்.
இந்த அமைப்பு திருமண வாழ்க்கைக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கணவருக்கு தொழில் நெருக்கடி எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
பரிகாரம்
திருமணத்துக்கு பின் ஆண், பெண் இருவருக்கும் செவ்வாய், சனி திசை இருக்க கூடாது.
நரசிம்மர் வழிபாடு இந்த கிரகங்களின் கூட்டணியால் பாதிப்புகளை குறைக்கும்.
செவ்வாய்- கேது
செவ்வாய் கேது உள்ளவர்கள் மேஷம், சிம்மம், தனுசில் செவ்வாய் கேது சாரம் பெற்று நின்றால் அல்லது செவ்வாய் , கேதுவுடன் இணைந்து எங்கு நின்றாலும் 27 வயதிற்கு மேல் தான் திருமணம் நடக்கிறது.
திருமணம் ஆன பின் ஏன் திருமணம் நடைப்பெற்றது என தோன்றும். கணவனை கடும் பகையாளியாக நீதிமன்ற வாசலையே பெண்கள் அதிகம் நாடுவார்கள்.
பரிகாரம்;
செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு, கேது திசை உடையவருடன் திருமணம் செய்யக்கூடாது. செவ்வாய் கிழமை விரதம் இருந்து வீரபத்திரரை வழிபட செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.
பாவகர்த்தரி தோஷம்
பாவகர்த்தரி தோஷமானது, திருமணம் அல்லது திருமணமே நடக்காத பெண்கள் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பை பெறலாம்.
உண்மையில் செவ்வாய் தோஷம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு ஜாதகத்தை நவகிரகங்களுமே இயக்கும்.
செவ்வாய் தசை, புத்தி அந்தர காலங்களில் பாதிப்பு அதிகமாகவும் மற்ற காலங்களில் மிதமாகவும் இருக்கும். எனவே செவ்வாய் தோஷம் கண்டு அஞ்சத் தேவை இல்லை.