மாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக்கூடாது ஏன்?
மாதவிடாய் காலங்களில் பெண்கள் தலைக்கு குளிக்கக்கூடாது என்று முன்னோர்கள் கூறியதற்கான அறிவியல் காரணம் பலரும் அறிந்திடாத நிலையில், தற்போது அதனை தெரிந்து கொள்ளலாம்.
மாதவிடாய்
பெண் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் மாதவிடாய் நிலையினை அடைவது இயற்கையான நிகழ்வாகும். இந்த நேரத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லாமல், முடிவெட்டுதல் கூடாது என்று கூறுவது மட்டுமின்றி தலைக்கும் குளிக்கக்கூடாது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
தற்போதைய நவீன காலத்தில் பெண்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பொதுவாக மாதவிடாய் 3 அல்லது 5 நாட்களுக்கு ரத்தப்போக்கு இருக்கும். பெரியவர்கள் 3 நாட்கள் தலைக்கு குளிக்கக்கூடாது என்று கூறுவார்கள்.
தலைக்கு குளிக்க கூடாது ஏன்?
மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு சீராக இருக்கவும், உடம்பிலுள்ள அழுக்குகள் வெளியேறவும் வேண்டும். ஆனால் உடல் சூடாக இருந்தால் மட்டுமே ரத்தப்போக்கும் சீராக இருக்கும்.
ஆதலால் இந்த நேரத்தில் தலைக்கு குளித்தால் உடல் குளிர்ச்சியடைந்து சரியான முறையில் ரத்தப்போக்கு நடைபெறாமல் இருந்து நோய் பாதிப்பும் ஏற்படுகின்றது.
மாதவிடாயின் போது வெளியேற வேண்டிய ரத்தம் சரியாக இல்லாவிடில், ரத்தம் உறைந்துவிடுவதுடன், வயிற்றில் வலி மற்றும் கட்டி ஏற்படுகின்றது. இவை சில தருணங்களில் புற்றுநோயாகவும் மாறுகின்றது.
இதன் காரணமாகவே தலைக்கு குளிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 3வது நாளில் ரத்தப்போக்கு குறைவாக இருக்கும் என்பதால் அதன் பின்பு தலைக்கு குளித்து கொள்ளலாம். இந்த நேரத்தில் தலைக்கு குளிக்க விரும்புபவர்கள் சுடுநீர் பயன்படுத்தி குளிக்கலாம்.
இத்தருணத்தில் இவ்வாறு பிரச்சினை ஏற்பட்டால் பெண்கள் மலட்டுத்தன்மை அடைய வாய்ப்பு அதிகம் இருந்ததால் தான் பெரியவர்கள் இந்த காலங்களில் கட்டாயம் தலைக்கு குளிக்கக்கூடாது என்றும் மேலும் கிராம புறங்களில், ஆறு மற்றும் ஓடைகளில் செல்லும் தண்ணீர் குளிக்க வேண்டிருப்பதால், இந்த நீர் மிகவும் குளிர்ந்த நீராக இருப்பது நோய் தாக்கத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளனர்.