கணவனை துண்டு துண்டாக வெட்டிய மனைவி: உடல் மீது ரசாயனம் ஊற்றிய போது நடந்த டுவிஸ்ட்

murder police investigation crime
By Manchu Sep 21, 2021 12:30 PM GMT
Report

பீகாரில் பெண் ஒருவர் தனது காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்து விட்டு, உடலை துண்டாக்கி ரசாயனம் ஊற்றி ஆதாரங்களை அழிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம்முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்தவர் ராகேஷ்(30). இவரது மனைவி ராதா

ராதாவிற்கு சுபாஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், காதலாக மாறியதுடன் பல நேரங்களில் தனிமையில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் ராகேஷை கொலை செய்துவிட இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ராதா தனது கணவன் ராகேஷை கொலை செய்வதற்கு தனது தங்கை கிருஷ்ணா மற்றும் தங்கை கணவரை அழைத்துக்கொண்டார். கள்ளக்காதலன் சுபாஷ், ராதா, கிருஷ்ணா உள்பட 4 பேரும் சேர்ந்து ராகேஷை அடித்துக் கொலை செய்ததோடு, மேலும் தடயத்தினை அழிக்க வேண்டும் என்பதால் உடலை துண்டு துண்டாக வெட்டி, பிணத்தினை ரசாயனத்தில் கரைக்க முயன்றுள்ளனர்.

ஆனால் ரசாயனங்கள் பயன்படுத்தியால் வெடித்து தீப்பற்றியதால், அக்கம் பக்கத்தினர் தீ விபத்து என்று பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்த சடலத்தினை அவதானித்து அதிர்ச்சியடைந்ததோடு, அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இறந்த ராகேஷ் பீகாரில் தடை செய்யப்பட்ட மதுவை சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வந்ததோடு, பொலிசார் தேடும் நபராகவும் இருந்துள்ளார். இதன் காரணமாக, ராகேஷ் பெரும்பாலும் அங்கும் இங்குமாக இரகசியமாக வாழ்ந்து வந்தார்.

இந்த நேரத்தில், ராகேஷின் கூட்டாளியான சுபாஷ் தான் ராகேஷின் மனைவியை கவனித்து வந்தார், சிறிது காலம் கழித்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அதன் பின்பு ராகேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதற்கு ராதாவின் சகோதரியும் அவரது கணவனும் கூட்டு சேர்ந்தார்கள். ராதா அண்மையில் ராகேஷை வீட்டிற்கு அழைத்து தான் அவரைக் கொலை செய்துள்ளார். துண்டுதுண்டாக வெட்டி உடலை ரசாயனம் ஊற்றி அழிக்க முயன்ற போது, ஏற்பட்ட வெடிசத்தம் காரணமாக மாட்டிக்கொண்டுள்ளனர்.

ராகேஷ் கொலை தொடர்பாக அவரது சகோதரர் தினேஷ் சாஹ்னி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராதா, அவரது கள்ளக்காதலன் சுபாஷ், சகோதரி கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணாவின் கணவர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார், அவர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். 

கணவனை துண்டு துண்டாக வெட்டிய மனைவி: உடல் மீது ரசாயனம் ஊற்றிய போது நடந்த டுவிஸ்ட் | Women Murder In Husband Acid

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US