நீரிழிவு நோய் ஆண்களை விட அதிகம் பெண்களை குறி வைப்பது ஏன் ? ஆராச்சியில் வெளியான உண்மை

health food women diabetes
By Nivetha Jun 19, 2021 03:20 AM GMT
Report

ஆண்- பெண் இடையேயான பாலின விகிதாச்சாரம், மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகளில் மாறுபாடு, உடல்நல பிரச்சினை ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வமின்மை போன்றவை நீரிழிவு நோய் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன.

நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்களை விட பெண்களுக்குத்தான் நோய் தாக்கத்தின் தன்மை அதிகம் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் கருத்துப்படி, உலகம் முழுவதும் 41 கோடியே 50 லட்சம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களில் 19 கோடியே 90 லட்சம்பேர் பெண்கள்.  

உலக அளவில் இந்தியாதான் நீரிழிவு நோயின் தலைநகரமாக விளங்குகிறது. 2017-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 7 கோடியே 20 லட்சம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8.8 சதவீதமாகும். டைப் -1 நீரிழிவு நோயுடன் ஒப்பிடும்போது ஆண்களை விட பெண்களுக்கு இதய செயலிழப்புக்கான அபாயம் 47 சதவீதம் அதிகமாக இருக்கிறது.

அதேவேளையில் டைப்-2 நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளான பெண்களில் 9 சதவீதம் பேருக்கு ஆண்களைவிட இதய செயலிழப்புக்கான அபாயம் அதிகம் இருக்கிறது.  

நீரிழிவு நோயாளிகள் இதய நோய் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் பார் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் இணை ஆசிரியர் சானே பீட்டர் கூறுகையில்,

‘‘ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் கழித்தே அறிகுறிகள் தென்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கால அளவு இதய செயலிழப்புக்கான அபாயத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் ஆண்கள் உட்கொள்ளும் மருந்தை விட பெண்கள் குறைவான அளவிலேயே உட்கொள்கிறார்கள். அதோடு ஆண்களை ஒப்பிடும்போது தீவிர சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் பெண்களுக்கு குறைவாகவே இருக்கிறது’’ என்கிறார். 

ஆண்- பெண் இடையேயான பாலின விகிதாச்சாரம், அதிகார பகிர்வில் ஏற்றத்தாழ்வு, மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகளில் மாறுபாடு, உடல்நல பிரச்சினை ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வமின்மை போன்றவை நீரிழிவு நோய் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன.

2040-ம் ஆண்டுக்குள் உலக அளவில் 31 கோடியே 30 லட்சம் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு கணக்கிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீரிழிவு நோயால் 21 லட்சம் பெண்கள் மரணத்தை தழுவுகிறார்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US