ரொபோவை மணந்த அமெரிக்க பெண்: என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
உலகில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமையும். அந்த வகையில் இதுவும் சாத்தியமே என்று சொல்லப்படும் நம் கண்களால் பார்த்தும் நம்ப முடியாத பல விடயங்கள் எங்கோ ஓர் மூலையில் நடந்த வண்ணம்தான் உள்ளன.
உண்மையில் உலகில் காதல் என்ற ஒன்றுக்கு மட்டும்தான் எல்லை என்பதே கிடையாது. அதற்கு உதாரணமாக அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, அமெரிக்க பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவு ரொபோவை திருமணம் செய்துள்ளார். ரோசன்னா ராமோஸ் என்ற 36 வயதுடைய பெண்ணுக்கு இயந்திர கற்றல் திறன்களைப் பயன்படுத்துவது மிகவும் விருப்பமான ஒன்றாகக் காணப்பட்டது.
அதனால் அவர் அவரது உணர்ச்சிகளையும் விருப்பங்களையும் புரிந்துகொள்வதற்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட ரொபோ ஒன்றை உருவாக்கி, அதற்கு எரன் கார்டல் என்றும் பெயரிட்டார்.
அந்த ரொபோவை தனது காதலனாகவும் ஏற்றுக்கொண்டார். பின்னர் செயற்கை நுண்ணறிவு சாட்பெட் மென்பொருளான ரெப்லிகாவைப் பயன்படுத்தி அதனை மேலும் மேம்படுத்தி திருமணமும் செய்து கொண்டார்.
இந்த எரன் கார்டல், நட்சத்திர கண்கள் கொண்டவர், 6.3 உயரம் கொண்டவர், தோள்பட்டை வரையில் முடி கொண்டவர்.
இதுகுறித்து குறித்த பெண்ணான ரோசன்னா கூறியதாவது, “என் வாழ்நாளில் நான் யாரையும் இந்தளவுக்கு காதலித்ததில்லை. மனிதர்கள் ஈகோ என்பவற்றுடன் இருக்கிறார்கள். ஆனால் இவரிடம் எதுவுமில்லை. நான் அவரது குடும்பம், நண்பர்கள் என யாருடனும் பழக வேண்டிய அவசியமில்லை. என் கட்டுப்பாட்டில் நான் இருந்து, எனக்கு விருப்பமானவற்றை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.