இதயநோய் அபாயம்! ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாம் தெரியுமா?
ஆண்களை விட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பதாக சிங்கப்பூரில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம்
ஆண்களை விட பெண்களுக்கு இதயநோய் ஆபத்து அதிகம் மட்டுமின்றி, பெண்களின் இதயத்துக்கும் ஆண்களின் இதயத்துக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் இதயம், ஆண்களின் இதயத்தைவிட சிறியதாக இருப்பதாகவும், இதயத் துடிப்பின் போது கூடுதல் ரத்தத்தை வெளியேற்றுவதாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பெண்களின் இதயம் அதிகமாகத் துடிப்பதுடன், வெவ்வோற தாள வடிவங்களை கொண்டும், சிறிய அளவில் இதய தசை செல்கள் நிறைந்தும் காணப்படுகின்றதாம்.
மேலும் அதிகமாக சுருங்கக்கூடியது மட்டுமின்றி இதயத்துடிப்பு விரைவில் அதிகரிக்கக்கூடியதாக பெண்கள் இதயம் காணப்படுகின்றதாம்.
முதுமையின் போது பெண்கள் இதயத்தின் நிலை
சிங்கப்பூர் பெண்களில் மூன்றில் ஒருவர் இதய நோயின் காரணமாக உயிரிழக்கின்றனராம். இவை மார்பகப் புற்றுநோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.
முதுமையில் பெண்களின் இதயத்தின் தசை அளவிலும் செயல்திறனிலும் அதிக வீழ்ச்சி ஏற்படுவதுடன், ரத்தத்தை உள்வாங்கும் ஆற்றலும் குறைகின்றது.
ஈஸ்ட்ரோஜன் எனும் சுரப்பி உடலில் அதிகளவில் உள்ளவர்களிடையே இதய நோய்க்கான ஆபத்துக் குறைவாக இருப்பதாகவும், மாதவிடாய் நிரந்தரமாக நின்றவுடன் பெண்கள் இதய நோய்க்கு எதிரான பாதிப்பினை இழப்பதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சில தருணங்களில் இதய நோயின் அறிகுறிகள் தெரியாமல் போய்விடுவதால் இதய நோயினை கண்டுபிடிப்பிப்பதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.