உயிருக்கு போராடிய கணவன்! வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் வழங்கிய மனைவி- நெஞ்சை உருக்கும் புகைப்படம்
இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தன் கணவன் உயிருக்கு போராட, வாயோடு வாய் வைத்து ஆக்சிஜனை வழங்கியும் அவர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஆக்ராவை சேர்ந்தவர் ரவி சிங்கேல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரவி சிங்கேல், ஒரு கட்டத்தில் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார்.
பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் ரவி சிங்கேலுக்கு, சிகிச்சை வழங்கப்படவில்லை, உடனடியாக சரோஜினி நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வரும் வழியிலேயே அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக, கணவனின் உயிரை காப்பாற்றுவதற்காக அவரது மனைவி ரேணு சிங்கேல் வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிக் கொண்டார்.
இருப்பினும் ரவி சிங்கேலின் உடல்நிலை மோசமடைய, பரிதாபமாக பலியானார், இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தொடர்ச்சியாக உயிர்கள் பலியாவது அதிகரித்த வண்ணம் உள்ளது, சடலங்களை எரிக்ககூட முடியாமல் அவதிப்படும் சூழலும் அதிகரித்திருக்கிறது.
