Neeya Naana: குடும்ப சுமையை தாங்கும் பெண்களின் ஆதங்கம் - பேச முடியாமல் நடுங்கிய படி அழுத அம்மா
குடும்பத்திற்காக பெண் பிள்ளைகள் கஷ்டப்படுவதை நினைத்து தாய்மார்கள் கண்கலங்கியுள்ளனர்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் குடும்பத்திற்காக தங்களின் விறுப்பு வெறுப்புக்களை மறைத்து வாழும் பெண் பிள்ளைகளின் ஆதங்கம் கருப்பொருளாகக் கொண்டு வாதம் ஆரம்பித்துள்ளது.
குடும்ப சுமையை தாங்கும் பெண்களின் ஆதங்கம்
அதில், ஒரு பெண் தன்னுடைய குடும்ப கஷ்டத்திற்காக தன்னுடைய 15 வயது முதல் உழைத்து கொண்டிருக்கிறாராம். அவர் கால் வலியால் துடிக்கும் பொழுது அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அம்மாவும் அழுது புலம்பியுள்ளார்.
சமூகத்தினரால் இவர்கள் பல தடவைகள் ஒதுக்கப்பட்டதாகவும் அவர்கள் பேசியுள்ளனர்.
மேலும், இன்னொரு பெண்ணொருவர், தன்னுடன் பிறந்த சகோதரியையும், சகோதரரையும் திருமணம் செய்து வைத்து விட்டு அவர்கள் திருமணத்திற்காக வாங்கிய கடன்களை குறித்த பெண் வேலை செய்து கட்டுவதாக பேசியுள்ளார்.
இதற்கு அவரின் தாயாரும் ஆதரவாக இருக்கிறார். இப்படி கண்ணீருடன் கூடிய கருத்துக்களை இந்த வாரம் நீயா நானாவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |