பெண்களே இந்த குணங்கள் உங்களை சிக்கலில் கொண்டுவந்து விடும்!
பெண்கள் புதிர் போன்றவர்கள், பெண்களை புரிந்துகொள்வது மிகவும் கஷ்டமான செயல் என்றெல்லாம் கூறக் கேட்டிருப்போம். அது உண்மையா? பொய்யா? என்று கேட்டால், உண்மையில் பெண்கள் எந்த நேரத்தில் எப்படியிருப்பார்கள்? அவர்களின் மனநிலை எவ்வாறு மாறும் என்பது அவர்களுக்கே தெரியாது.
சரி இப்போது பெண்களின் இந்த 6 குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம்!
சுயநலம்
தங்கள் வேலைகளை முடிப்பதற்கு மும்முரமாக இருப்பார்கள். அவர்கள் சார்ந்த சில விடயங்களில் மிகவும் சுயநலவாதிகளாக இருப்பார்கள். இது நிறைய பெண்களிடம் இயற்கையாகவே உள்ள ஒரு பண்பு.
கோபம்
கோபம் பொதுவாகவே பெண்களுக்கு அதிகமாக வரும். அப்படி கோபம் வரும்போது என்ன பேசுகிறோம் என்று சற்றும் சிந்திக்காமல் பேசுவார்கள். இவ்வாறு பேசுவதனால் பிரச்சினைகளை குறைப்பதை விட பெரிதாக்குகிறார்கள்.
தைரியம்
பெண்களுக்கு தைரியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். சில பெண்கள் வீட்டில் சாதுவாக, அமைதியாக இருப்பார்கள். ஆனால், சடுதியாக நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தைரியமாக செயற்படுவார்கள். தைரியம் நல்லதுதான் என்றாலும் இந்த அசட்டு தைரியம் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது.
பேராசை
சொகுசாக வாழ வேண்டும், அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பெண்களிடம் எப்பொழுதுமே உண்டு. இதில் அவர்கள் ஒருபோதும் திருப்தி அடையமாட்டார்கள்.
பொய் கூறுவார்கள்
சூழ்நிலைகளை சமாளிக்க பெண்கள் பொய் கூறுவார்கள். அவ்வாறு அளவுக்கதிகமாக பொய் கூறும் பெண்கள் துரோகம் செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
சிந்திக்காமல் செயற்படுதல்
எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னர் சிந்திக்காமல் செய்துவிட்டு, பின்னர் வருத்தப்படுவார்கள். அடிப்படையற்ற செயல்களை அடிக்கடி செய்து பின்னர் பிரச்சி்னைகளை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள்.