அடுக்கு மாடியில் இருந்து பணத்தை கட்டுக்கட்டாக தூக்கி வீசிய பெண் - வைரல் வீடியோ
அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து சீன பெண் ஒருவர் பணத்தை கட்டுக்கட்டாக தூக்கி வீசிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் வீசப்பட்ட பண நோட்டுக்கள் உண்மையானவை என்பது உறுதி செய்யப்ட்டுள்ளது.

வைரல் காணொளி
சீனாவின் சாந்தௌ (Shantou) பகுதியில் உள்ள ஸ்டார் லேக் சிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் பணத்தை ஒரு ஜன்னல் வழியாக தூக்கி வீசுகிறார்.
அந்த பெண் சுமார் 1000 ஹாங்காங் டொலர் நோட்டுகள் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பணத்தை அங்குள்ள மக்கள் எடுக்க முயன்றுள்ளனர்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.
அந்த மாடியில் இருந்து பெண் மூலம் வீசப்பட்ட அந்த பணம் அவ்வளவும் உண்மையான நோட்டுக்கள் என உறுதி செய்யப்ட்டுள்ளது.
அதே நேரத்தில் தரையில் விழுந்த பணத்தை எடுத்த பொதுமக்கள் உடனடியாக அந்த பணத்தை நிர்வாக அலுவலகத்திலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலேயே ஒப்படைக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்த பெண் ஏன் அப்படி பணத்தை தூக்கி வீசினார் என்பதற்கான தகவல் ஒன்றும் இன்னும் பெறப்படவில்லை.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் கூற்றுப்படி சுமார் 2 லட்சம் முதல் 20 லட்சம் ஹாங்காங் டொலர்கள் என தோராயமாக மதிப்பிட்டு கூறி உள்ளனர். இந்த காணொளி தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
A woman in a residential complex in Shantou, Guangdong reportedly threw large amounts of HK$500 (US$64.50) and HK$1,000 notes from her window, sparking a scramble below. Police have stepped in, and recovered cash has been collected and returned to the owner, with local… pic.twitter.com/p1dcmRiXdx
— Shanghai Daily (@shanghaidaily) April 14, 2026