Viral video: அந்த தோல் எங்க போச்சு.. உருளைகிழங்கை ஒரே சலவையில் சுத்தம் செய்த பெண்
உருளைகிழங்கை ஒரே சலவையில் சுத்தம் செய்த பெண்ணின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வித்தை காட்டிய பெண்
தினம் தினம் சமூக வலைத்தளங்களில் ஏதாவொரு காணொளி வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், சலவை இயந்திரத்தில் பெண்ணொருவர் கிலோ கணக்கிலான உருளை கிழங்குகளை கொட்டுகிறார். அதன் பின்னர், இயந்திரத்தை ON செய்து விட்டு, ஆடைகளை சுற்ற விடுவது போன்று உருளை கிழங்குகளை சுற்ற விடுகிறார்கள்.
சுற்றி முடிந்தவுடன் சலவை இயந்திரத்தின் கதவை திறந்து பார்க்கும் பொழுது, உருளைகிழங்கில் மேல் பகுதியில் இருக்கும் தோல் நீக்கப்பட்டுள்ளது. அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து சமைக்க செல்கிறார், அத்துடன் காணொளி முடிவடைந்துள்ளது.
இந்த காணொளியில் செய்வது போன்று சலவை இயந்திரத்தில் உருளைகிழங்குகளிலுள்ள தோல்களை அகற்ற முடியாது. மாறாக நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி விட வேண்டும் என்பதற்காக இப்படி போலியான காணொளிகளை பதிவேற்றி வருகிறார்கள்.
மில்லியன் கணக்கானோரின் பார்வைக்கு சென்றுள்ள இந்த காணொளியை சோம்பேறித்தனமாக திரியும் நண்பர்களுக்கு பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |