Viral video: GBU பாடலுக்கு பெண்ணுக்கு நிகராக குத்தாட்டம் போட்ட நாய்- இறுதிவரை பாருங்க
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான GBU பட பாடலுக்கு பெண்ணொருவருடன் நாய் ஆடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தினம் தினம் சமூக வலைத்தளங்களில் ஏதாவொரு காணொளி வைரலாவது வழக்கம்.
இணையவாசிகளின் விருப்பங்களை தெரிந்து கொண்ட இயக்குநர்கள் அவர்களின் திரைப்படங்களை வெளியில் விடுவதற்கு முன்னரே அதன் பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கி விடுகிறார்கள்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் ரீல்ஸ் செய்து பதிவிட ஆரம்பிக்கும் பொழுது படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிகிறது.
Vibe-ன்னா இதுதானா?
இந்த நிலையில், இன்றைய தினம் திரையில் வெளியாகி, வசூல் வேட்டையை அள்ளிக் கொண்டிருக்கும் GBU திரைப்படத்தில் வரும் பாடலுக்கு பெண்ணொருவர் நடனம் ஆடுகிறார்.
அவர்கள் நடனம் ஆடுவதை நீண்ட நேரம் கவனித்த நாய், அதுவும் அதனுடைய இரு கால்களையும் தூக்கிக் கொண்டு ஆடுகிறது.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “அஜித்தின் படம் எப்படி உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.. அவ்வளவு நன்றாக உள்ளது” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |