சளி, இருமலால் அவதிப்பட்ட பெண்... நுரையீரலில் மருத்துவர்கள் கண்ட பேரதிர்ச்சி
இருமல் சளி என்று பரிசோதித்த பெண்ணின் நுரையீரலில் விசித்திரமான பொருள் சிக்கியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் 27 வயதான ஆசிரியை ஒருவர் தொடர்ந்து பல நாட்கள் இருமல், சளியால் அவதிப்பட்டு வந்த நிலையில் காசநோயாக இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவ்வாறு மருத்துவமனைக்கு சென்று 6 மாதம் சிகிச்சை எடுத்த பின்பு அவரது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத நிலையில், இறுதியாக எக்ஸ்ரே எடுப்பதற்கு முடிவு செய்துள்ளனர். எக்ஸ்ரே எடுத்து பரார்த்தில் எதோ சளி போன்று கட்டிக்கொண்டிருப்பதாக தெரிந்த நிலையில், மீண்டும் காச நோய்க்கு சிகிச்சை எடுத்துள்ளார்.
அதிலும் எந்த பயனும் இல்லாத நிலையில், ஸ்கேன் செய்ய முடிவு செய்து, எடுத்து பார்த்த போது எதோ சிக்கியிருந்த நிலையில், அறுவை சிகிச்சையும் செய்து முடித்தார்கள். இதில் பேரதிர்ச்சியாக நுரையீரலில் ஆணுறை ஒன்று இருந்துள்ளது அகற்றப்பட்டுள்ளது. ஆச்சரியப்பட்ட மருத்துவர்கள் ஆசிரியையை சமாதானப்படுத்தி அவரிடம் காரணத்தினைக் கேட்டுள்ளனர்.
கணவருடன் உறவில் இருந்த போது தவறுதலாக ஆணுறையை விழுங்கியதாகவும், வெளியே கூறினால் அவமானம் என்பதால் இவ்வாறு பல சிகிச்சை எடுத்து வந்தது மட்டுமின்றி, தாங்கமுடியாத வேதனையையும் அடைந்துள்ளார்.தற்போது குறித்த பெண்ணிற்கு காச நோய் எதுவும் இல்லாத நிலையில் பூரண குணமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.