கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பெண்... பகீர் பின்னணி என்ன?
கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் கணவர் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(35). இவருடைய மனைவி அனுசியா (25).
இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. மகேந்திரன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த பாப்பன்ன செட்டியார் வீதியில் வசித்து வந்ததுடன், பனியன் நிறுவத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் திகதி குழந்தையுடன் அனுஷியா மாயமாகியதால், கணவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
பொலிசாரின் தேடுதலில், அனுஷியா சதீஸ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால் அவருடன் தங்கியிருப்பது தெரியவந்தநிலையில், அறிவுரை வழங்கி இரண்டு பேரையும் பொலிசார் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்த தனது தோழியின் வீட்டிற்கு கணவருடன் சென்றுள்ளார்.
அங்கு தோழி இருவரையும் சமாதானப்படுத்த முயன்ற போது, குழந்தையை தூக்கி வெளியே செல்லுமாறு, நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம் என்று அனுஷியா கூறியதால், சுதாவும் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்பொழுது மனைவி அனுஷியாவை கணவர் மகேந்திரன் துப்பட்டாவால் கழுத்தை நெறித்ததால், மயங்கிய நிலையில் கிடந்த அனுஷியாவை மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுதா கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதா உயிரிழந்ததையடுத்து, கணவர் மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.