நீட் எதிர்ப்பு போராட்டம்: காவல்துறை வாகனத்தை தனி ஆளாக மறித்த பெண்! படு வைரலாகும் வீடியோ
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லியில் தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
டெல்லியில் ஆரம்பமான இந்த நீட் எதிர்ப்பு எழுச்சி தற்போது நாடு முழுவதும் பரவி, சென்னை, மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

வைரல் காணொளி
இந்த நிலையில், மும்பையில் இன்று காலை நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது, அங்கு இருந்த ஒரு பெண் துணிச்சலுடன் காவல்துறை வாகனத்தின் முன் நின்று, அது செல்ல முடியாதபடி மறித்தார்.இதனால் காவல்துறை வாகனம் சாலையிலேயே நிறுத்தப்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாணவர்கள் காவல் வாகனத்திலிருந்து கீழே இறங்கி, மீண்டும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
காவல்துறை வாகனத்தைத் தனி ஒருவராக எதிர்த்து நின்ற அந்தப் பெண்ணின் துணிச்சலான செயலை காட்டும் காாணளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதுடன் குறித்த பெண்னுக்கு பாராட்டுகளும் குவித்து வருகின்றது.
Mumbai today
— 🪳Against Corruption (@akashuchani08) July 22, 2026
Girl stood in front of Mumbai police truck which detained students pic.twitter.com/nJv3FLl3qw
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |