வாடகைக்கு வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு படுக்கை அறையில் காத்திருந்த அதிர்ச்சி... அலண்டு ஓட வைத்த அந்த உருவம்!
விர்ச்சுவல் டூர் மூலம் வாடகைக்கு வீடு தேடிய பெண், அந்த வீட்டின் படுக்கையில் பேய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
கொரோனா அச்சுறுதல் இருப்பதால் அனைத்து சேவைகளும் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
அமெரிக்காவில் வீடு வாடகைக்கு தேவைப்பட்டால், குறிப்பிட்ட வீட்டை விர்ச்சுவல் டூர் மூலம் பார்வையிட்டு, பிடித்திருந்தால் ஓகே சொல்லலாம்.
அப்படி, வீடு ஒன்றை வாடகைக்கு தேடிய பெண்ணுக்கு நேர்ந்த எதிர்பாராத அனுபவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Streeteasy வழியாக அப்பார்ட்மென்ட் தேடிய பெண், அந்த வீட்டின் படுக்கையில் பெண் ஒருவர் படுத்திருப்பதை பார்த்துள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த பெண் உருவம் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பேய் என நினைத்துள்ளார்.
சாரா வாண்டர்பிட் (Sarah Vanderbilt) என்ற பெண் டிக்டாக்கில் பிரபலமாக உள்ளார், அவரது ஐடியில் பகிரப்பட்ட வீடியோவில், வெர்ச்ஷூவல் டூர் மூலம் அப்பார்மென்ட் ஒன்றை பார்வையிடுகிறார்.
மிகவும் காஸ்டிலியாக வடிவமைக்கப்பட்ட அந்த வீட்டின் அனைத்து அறைக்களுக்குள்ளும் சென்று பார்வையிடுகிறார்.
அங்கு பார்வையிட்டபிறகு உடனடியாக பெட்ரூமுக்குள் செல்ல திரும்பும்போது படுக்கையில் பெண் ஒருவர் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.