தான் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திய பெண்- நெகிழ்ச்சி வீடியோ
ஒரு பெண் தன் கணவனுக்கும், 10 வயது மகனுக்கும் தான் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக தெரிவித்துள்ள வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கர்ப்பத்தை வெளிப்படுத்திய பெண்
அந்த வீடியோவில்,
தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தன் கணவர் மற்றும் 10 வயது மகனிடம் சொல்ல, முதலில் அவர்களை அமர வைத்து அவர்கள் முன்பு ஒரு பெட்டியை வைத்தார்.
பின்னர், அதை திறந்து பார்த்த போது அதில் அழகான ஒரு பொம்மையும், கர்ப்ப பரிசோதனை குழாய்யும் இருந்தது.
இதைப் பார்த்ததும் கணவர் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். மகனுக்கு உடனே என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பினான்.
அப்போது, தந்தை உங்க அம்மா கர்ப்பமாக இருக்கிறாள் என்று சொன்னதும் மகன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தான்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே மகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
