மின்னல் வேகத்தில் வந்த பேருந்து... டிரைவரால் நுலிழையில் உயிர் பிழைத்த பெண்
கர்நாடகாவில் பெண் ஒருவர் பேருந்து விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பதபதைக்க வைக்கும் காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
தற்போது விபத்துக்கள் என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்ட நிலையில், பல உயிர்களும் பலியாகி வருகின்றது. ஆனால் இம்மாதிரியான விபத்துக்களில் சில அதிர்ஷ்டசாலி நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆம் ஆளையே காலிசெய்யும் அளவிற்கு விபத்து ஏற்பட்டாலும், சாதுர்யமாக உயிர்தப்பி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுப்பார்கள்.
இங்கு கர்நாடகா மாநிலம் மங்களூரில் சாலையைக் கடக்க முயன்ற பெண் பேருந்து வருவதை அவதானிக்கவில்லை. உடனே சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநரால் குறித்த பெண் நுலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
#Watch | A ghastly road accident was averted due to the presence of mind of a bus driver in Mangalore.#ViralVideo #Bus #Mangalore pic.twitter.com/M6GdpO8gvg
— IndiaToday (@IndiaToday) June 21, 2023