நிறுவனத்தில் வேலை கிடைக்க வித்தியாசமாக Resume-யை அனுப்பிய இளம்பெண் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
இளம்பெண் ஓருவர் வேலை கிடைப்பதற்காக செய்த செயல் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசிக்கும் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் (Karly Pavlinac Blackburn) என்ற இளம்பெண் நைக் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முறை தனது ரெஸ்யூமை (RESUME) அனுப்பி உள்ளார்.
ஆனாலும், வேலை கிடைக்கவில்லை. இதனால், அவரது தோழி ஒரு ஆலோசனை கூற அதனை கையில் எடுத்துள்ளார் கார்லி.
அதாவது, கேக் ஒன்றை வாங்கி அதில், தனது ரெஸ்யூமை எழுதி, அந்நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது, அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்த சமயத்தில், கார்லி அனுப்பிய கேக் சென்றடைந்துள்ளது.
இதுகுறித்து அப்பெண் தெரிவிக்கையில், “இரண்டு வாரங்களுக்கு முன்பாக நைக் நிறுவனத்தில் என் சுயவிவர குறிப்புகளை அனுப்பினேன்.
ஆனால், அந்த நிறுவனம் தற்போது யாருக்கு வேலை வாய்ப்பு வழங்க தயாராக இல்லை. எனவே தான், கவனத்தை பெறுவதற்காக அங்கே நிகழ்ச்சி நடந்த போது, இப்படி கேக்கில் Resume அனுப்பி வைத்தேன்.
இதை விட சிறப்பான வழி எனக்கு தோன்றவில்லை” என தெரிவித்தார். அப்படி இருந்தும் அப்பெண்ணுக்கு வேலைக்கான அழைப்பு வரவில்லையாம்.
இருந்தாலும், வித்தியாசமாக இளம் பெண் அனுப்பிய Resume தொடர்பான விஷயம் குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.