குட்டி நாய்களை சுவற்றில் வீசி சித்திரவதை செய்யும் பெண் - பதற வைக்கும் காட்சி
பிறந்து சில நாட்களான நாய் குட்டிகளை பெண் ஒருவர் இரக்கமே இல்லாமல் சுவற்றில் வீசி கொன்ற காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் நாம் இருக்கும் இடத்தில் அதை சமூக வலைத்தளங்கள் மூலம் பார்க்க முடியும்.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளி மிகவும் கொடூர தன்மையாக இருக்கிறது. பெண்கள் பொதுவாக இரக்க குணம் கொண்டவர்கள் அனால் இந்த காணொளியில் வரும் பெண் வாய் இல்லா ஜீவனை சுவற்றில் வீசி துடிதுடிக்க கொல்கிறார்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அடுத்த கம்பரசம் பேட்டையைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார்.

புவனேஸ்வரி வீட்டின் எதிரே இருக்கும் மீனாட்சி நாய்க்கு உணவளிப்பது தொடர்பில் எப்போதும் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் நாய்களை இவர் அடித்து விரட்டுவாராம்.
இந்த நிலையில் பிறந்து சில நாட்களான நாய்குட்டிகள் வாசலில் நின்ற குரைத்து கொண்டிருககும் போது அங்கு வந்த மீனாட்சி அந்த நாய் குட்டிகளை சுவற்றில் வீசி அது துடிதுடிக்க கத்துவதை பார்த்து இன்னுமொரு நாய் குட்டியையும் தூக்கி வீசுகிறார்.

இந்த பெண்ணின் இந்த இரக்கமில்லாத செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாயில்லா ஜீவன்களுக்கு இவ்வாறு கொடுமை செய்வதை பலரும் கண்டித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |