8 மாதத்திற்கு பின்பு கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் எலும்புக்கூடு... கொடூரத்தின் பின்னணியில் பகீர் உண்மை
தமிழகத்தில் கள்ளக்காதலனால் இளம்பெண் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறை பகுதியை சேர்ந்தவர் லிங்கம். இவரது மகள் சத்யபிரியா (21). இவருக்கும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த வசந்த பாண்டி (26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.
இந்நிலையில் சத்யபிரியா தனது தந்தை வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்து, குழந்தை பெற்றதுடன் தந்தையுடனே தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அப்பொழுது சத்யபிரியாவிற்கும், ஞான குருசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததுடன், அடிக்கடி தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் சத்யபிரியா ஞான குருசாமியை தனது கழுத்தில் தாலிகட்டுமாறு தொந்தரவு செய்ததுடன், தாலிகட்டாவிட்டால் உனது பெயரை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற சத்யபிரியாவைக் காணாததால் அவரது பெற்றோர் கடந்த ஆகஸட் மாதம் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 8 மாதங்களாக பொலிசார் தேடிவந்த நிலையில், அவரது மொபைல் போன் மூலம் ஆராய்ந்து பார்த்ததில் ஞானகுருசாமி அடிக்கடி பேசிவந்ததை அறிந்த பொலிசார் அவரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது ஞானகுருசாமி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சத்தியபிரியாவை சாத்தூர் காட்டுப் பகுதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அழைத்து சென்று துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததையும், உடலை அங்கேயே விட்டுச்சென்றதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் ஞானகுருசாமியை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று சத்தியபிரியாவை எலும்புக்கூடாக மீட்டுள்ளனர்.
இளம்பெண் கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பின்பு எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.