பைக்கில் சில்மிஷம்: ஓடும் வண்டியில் இருந்து குதித்த பெண்! நெஞ்சை பதறவைக்கும் காணொளி
பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் ஓட்டுனர் பாலியல் லீலையில் ஈடுபட்ட சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.
பைக்கில் சில்மிஷம்
இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு ஏப்ரல் 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் பைக் டாக்ஸி சவாரிக்கு பதிவு செய்திருந்தார்.
குறித்தப் பெண் தனது தோழியின் வீட்டிற்கு செல்ல இருந்ததால் பைக் சவாரிக்கு பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் பதிவு செய்த பைக் வர அவரை அவரை ஏற்றிக் கொண்டு ஓடிபி எண்ணை பரிசோதிக்க வேண்டும் என கூறி குறித்த பெண்ணின் போனை பறித்துக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.
இறங்கும் போது போனை வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து அவரும் பைக்கில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போது குறித்த ஓட்டுனர் வட்டியை எதிர்திசையை நோக்கி செலுத்தி அந்தப் பெண்ணிடம் பாலியல் தொல்லைகளைக் கொடுத்திருக்கிறார்.
இதனால் பதறிப்போன பெண் செய்வதறியாது வேகமாக சென்றுக் கொண்டிருந்த பைக்கில் இருந்து கீழே குதித்திருக்கிறார். கீழே விழுந்தததில் அவருக்கு உடம்பில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைப் பெற்றிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு குறித்தப் பெண் பொலிஸ் நிலையத்தில் புகாரொன்றை அளித்திருக்கிறார். இதற்கினங்க பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபரை அடையாளம் கண்டு கைது செய்திருந்தனர்.
#WATCH| Bengaluru, Karnataka: Woman jumps off a moving motorbike after the rapido driver allegedly tried to grope her & snatched her phone
— ANI (@ANI) April 26, 2023
On 21st April, woman booked a bike to Indiranagar, driver allegedly took her phone on pretext of checking OTP & started driving towards… pic.twitter.com/bPvdoILMQ2