தொடர்ந்து காணாமல் போன உள்ளாடைகள்... உண்மையை கண்டுபிடித்த பின்பு நடந்த சோகம்
குஜராத்தில் பெண் ஒருவரின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போன நிகழ்வில் பின்னணியில் பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
காணாமல் போன உள்ளாடைகள்
குஜராத் அகமதாபாத்தில் தண்டுகா என்ற தாலுகாவில் உள்ள பச்சம் என்ற கிராமத்தில் பெண்ணின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளது.
தினமும் துவைத்து போடும் உள்ளாடைகள் இரவு நேரத்தில் காணாமல் போன நிலையில், இந்த சம்பவம் கடந்த ஆறு மாதங்களாகவே நடைபெற்று வந்துள்ளது.
இந்த உண்மையைக் கண்டறிய குறித்த பெண் ரகசியமாக ஒரு இடத்தில் செல்போனை வைத்து படம்பிடித்துள்ளார். இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 31 வயதான நபர் சிக்கியுள்ளார்.
காயப்போட்டிருக்கும் துணிகளில் சிலவற்றை திருடி சென்றதை அவதானித்த பெண், ஆத்திரத்தில் அந்த நபர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவதானித்த போது உள்ளாடைகள் குவியலாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த நபர் குறித்த பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த போது பெண் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினை அழைத்துள்ளார். உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் அனைவரும் திரண்டு வந்து குறித்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் இவை அப்பகுதியில் கலேபரமாக மாறியதோடு, 10க்கும் மேற்பட்ட நபர்கள் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 20 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |