கணவரும் விட்டுட்டு போய்ட்டாங்க! பிள்ளைகளும் உடல் கருகி மரணம்- இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
சமீபத்தில் நடந்த வேலூர் தீ விபத்தில் பெற்ற பிள்ளைகள், தந்தையை இழந்த பெண், ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையம் அருகில் பட்டாசு கடை நடத்தி வருபவர் மோகன். இவர் கடந்த ஏப்.,18ம் தேதி கடைக்கு தனது பேரக்குழந்தைகளான தனுஷ் (8) மற்றும் தேஜஸ் (6) வழக்கம் போல் கடைக்கு வந்தார்.
அப்போது பட்டாசு வாங்க வந்திருந்த நபர் ஒருவர், இதை எப்படி வெடிக்க வைப்பது என கேட்டுள்ளார், கடைக்கு உள்ளேயே பிள்ளைகளை விட்டுவிடடு வெளியில் வந்து பட்டாசை வெடிக்க வைத்துள்ளார்.
அதில் எதிர்பாராதவிதமாக சிறு பொறி ஒன்று கடைக்குள் சென்று விட்டது, இதைப்பார்த்ததும் குழந்தைகள் பயத்தில் பட்டாசு அதிகம் உள்ள ரூமூக்குள் சென்றுவிட்டன.

உடனே செய்வதறியாது தவித்த தாத்தா மோகன், குழந்தைகளை காப்பாற்ற கடைக்குள் நுழைந்தார், எனினும் இந்த விபத்தில் மூவரும் உடல் கருகி பலியாகினர்.
இதனையடுத்து இறந்த சிறுவர்களின் தாயாரும் இறந்த மோகனின் மகளுமான வித்யாலட்சுமி (வயது 33) மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், லத்தேரி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தலை மற்றும் உடல் சிதறி இறந்த அவரது உடலை மீட்ட ஜோலார்பேட்டை தென்னக ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தாத்தா மற்றும் பேரன்கள் இறந்த சோகம் ஆறுவதற்குள் நடந்த இந்த சோகம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.