குழந்தை பிறந்த 2 நாளில் தேர்வு எழுத வந்த பெண்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
இளம்பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த இரண்டு நாளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையுடன் தேர்வு எழுதிய பெண்
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட்டை சேர்ந்தவர் சீத்தல்(21). இவர் தனது வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பினை பாதியில் நிறுத்தியுள்ளார்.
பின்பு கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த இவர் கல்வியினை மீண்டும் தொடர்ந்துள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் படிப்பினைத் தொடர்ந்த இவர், அங்குள்ள ஜுனியர் கல்லூரி ஒன்றில் 12ம் வகுப்புக்கு படித்து வந்தார். இவருக்கு 10 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்ததைக் காரணமாக காட்டி பரீட்சையை எழுதுவதை நிறுத்தால், குழந்தை பெற்ற இரண்டு நாளில் ஆங்கில தேர்வை தனது சகோதரியுடன் வந்து எழுதியுள்ளார்.
நேற்றுமுன்தினம் அரசியல் அறிவியல் தேர்வை எழுதிய இந்த மாணவிக்கு தேர்வு மைய அதிகாரிகள் அனைத்து உதவியையும் செய்துள்ளனர்.
தேர்வு மையத்தில் குழந்தையை தூங்க வைப்பதற்கு தொட்டில் உட்பட பல உதவிகளை செய்து கொடுத்தனர். கல்வியின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கைக்குழந்தையுடன் பொதுத்தேர்வு எழுதிய பெண்ணின் செயல் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |