ஹீரோயின் போன்று இருந்த இளம்பெண்! கணவரால் எலும்பும் தோலுமாக மாறிய சோகம்
கணவர் கூறிய கருத்தினால், பெண் ஒருவர் உடல் எடையைக் குறைத்து விபரீத செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எலும்பும் தோலுமாக மாறிய பெண்
ரஷ்யாவில் பெல்கிரேடில் வசிக்கும் யானா பாப்ரோவா என்ற பெண் அழகாகவும், கொழுகொழுவென உடல் மற்றும் கன்னத்தினை கொண்டுள்ளார்.
ஆனால் இவர் கல்லூரி படிக்கும் தற்போது இருந்த உடல் எடையை விட குறைவாக இருந்துள்ளார். பின்பு திருமணத்திற்கு பின்பு எடை அதிகரித்துள்ளது.
கல்லூரியில் இருந்தது போன்று உடல் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்த வேலை கணவரும் அவரது கருத்தை கூறியுள்ளார். அதாவது உனது கண்ணம் கொழுகொழுவென பருமனாக இருப்பதாக கூறியதால், உடல் எடையைக் குறைப்பதற்கு பெண் முடிவு செய்துள்ளார்.
இதற்காக வெறும் பிஸ்கட், சாக்லேட், டீ இவற்றினை மட்டும் சாப்பிட்டுவிட்டு தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்ட இவர் எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.
5.2 அடி உயரம் கொண்ட யானா தனது உடல் எடையை 22 கிலோவாக மாற்றி படுமோசமாக மாறியுள்ளார். ஆனால் இதில் வருத்தம் என்னவெனில் உடல் எடை குறைத்ததால் வேலை பறிபோனதுடன், இவரது கணவரும் இவரை விட்டு பிரிந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |