துளியும் மேக்கப் இல்லாமல் த்ரிஷா வெளியிட்ட காணொளி... கருத்துக்களை அள்ளிவீசும் ரசிகர்கள்
நடிகை திரிஷா தனது செல்லப்பிராணியுடன் துளியும் மேக்கப் இல்லாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகை கலக்கி வருகின்றார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட பல படங்களில் நடித்துள்ளதுடன், தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றார்.
குறிப்பாக, அண்மையில் விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்து லியோ மற்றும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் திரிஷா நடித்தார்.
மேலும், விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் திரிஷா தனது செல்லப்பிராணியை கையில் சுமந்தபடியே ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி செய்துள்ளார். இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் குறித்த காட்சியில் திரிஷா துளியும் மேக்கப் இல்லாமல் காணப்படுகின்றார். ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |