குளிர் காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் நல்லதா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
குளிர் காலத்தில் அதிகமாக கிடைக்கும் ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடலாமா?
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, இருமல் போன்ற தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து, சுருக்கங்களை தடுப்பதுடன், சருமத்தை மென்மையாக்கவும், பளபளபாக்கவும் வைக்க உதவுகின்றது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்கின்றது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் எடையைக் குறைக்க உதவுகின்றது.
இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும் உதவும்.
இதில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை குறைபாட்டை தடுக்கின்றது.
ஆரஞ்சு பழத்தை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை நோய், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நலமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |