குளிர்காலத்தில் மஞ்சளை இப்படி சேர்த்துக்கோங்க... நோய் எதிர்ப்பு சக்தி எகிறுமாம்
மஞ்சளில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குர்குமின் நிறைந்துள்ளது. எனவே இந்த குளிர்காலத்தில் உங்கள் உணவில் எப்படி மஞ்சளை சேர்ப்பது என்று தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் உணவில் மஞ்சள் சேர்த்துக்கோங்க
தண்ணீரில் மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின்பு அதில் எலுமிச்சை ஜுஸ் சேர்த்து குடிக்கவும். இது செரிமானத்திற்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும்.
சூடான பாலில் மஞ்சள், மிளகு தூள் சேர்த்து இனிப்புக்காக சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்பு இதை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பாலில் வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதில் மஞ்சள் சேர்த்து குடிக்கவும். தினமும் இந்த பானத்தை குடித்து வர நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, சிறிதளவு தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் செரிமானத்தை மேம்படுத்தவும், சளியை தடுக்கவும் செய்யலாம்.
நீங்கள் தினமும் குடிக்கும் சூப்பில் கொஞ்சம் காய்கறியுடன் சிறிது மஞ்சள் சேர்த்து குடித்துவர நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மஞ்சளில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு நீங்கும். குளிர் காலத்தில் நீங்கள் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டாலும், மருத்துவ ஆலோசனை பெற்று உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |