குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமலை அலட்சியப்படுத்தாதீங்க... தீவிர பிரச்சனையாக மாறும்
குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் பிரச்சனை, மூச்சுக்குழாய் அழற்சி இவை எவ்வாறு ஏற்படுகின்றது, இவற்றிற்கு எவ்வாறு சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
குளிர்காலம்
குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே பலரும் மூச்சு விடுவதற்கு அதிகமாக சிரமப்படுகின்றனர். அதாவது இருமல், சளி பிரச்சனையுடன் நுரையீரல் தொற்றும் ஏற்படுகின்றது.
அதாவது காற்றின் குளிர்ச்சி, மாசு, சுவாசப்பாதையினை எரிச்சலூட்டும் வைரஸ் தொற்றுகளே மூச்சுக்குழாய் அழற்சி பாதிப்புகள் அதிகமாகின்றது.
இதுபோன்ற நேரத்தில் இருமல், சளி, மூச்சுத்திணறல் இவற்றினை புறக்கணித்தால், COPD எனப்படும் தீவிரமான நுரையீரல் அடைப்பு மற்றும் நீண்டகால நுரையீரல் பாதிப்பு ஏற்படுகின்றது.

அழற்சி வருவது ஏன்?
மூச்சுக்குழாய் அழற்சி என்பது நுரையீரலுக்குள் காற்றை எடுத்துச்செல்லும் குழாய்களில் வீக்கம் ஏற்படுகின்றது. இவை குளிர்ந்த காற்று, மாசுபாடு, வைரஸ் தொற்று இவற்றினால் ஏற்படுகின்றது.
மூச்சுக்குழாய் வீங்குவதுடன், சளி அதிகமாகி இருமல், மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இரண்டு வார்த்திற்கு மேல் நீடிக்கும் போது இதனை புறக்கணிக்காமல் மருத்துவர்களை அணுக வேண்டும். அடிக்கடி ஏற்படும் சுவாச தொற்றுகள் கடுமையான நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

பரிசோதனைகள் என்ன?
தொடர் சளி, இருமல், மூச்சுப்பிரச்சனை பிரச்சனை இருந்தால் செய்ய வேண்டிய பரிசோதனையைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
உங்களது சுவாசத்தின் நிலை, காற்றோட்டம், வீக்கம் போன்றவற்றினை மதிப்பீட செய்ய வேண்டும்.
இரண்டு வாரத்திற்கு மேல் இருமல் நீடித்தால், மார்பிற்கு எக்ஸ்ரே எடுப்பது அவசியமாகும்.
நுரையீரல் பரிசோதனையான PFT பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

வைரஸ், பாக்டீரியா, ஒவ்வாமை போன்றவற்றின் காரத்தினை கண்டறிவது, ஸ்பைரோமேட்ரி என்ற சோதனையின் மூலம் காற்றோட்டத்தில் தடை இருக்கின்றதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தொற்று மற்றும் ஆக்ஸிஜன் அளவை கண்காணிப்பது போன்றவற்றினை செய்யவும். சுய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சிகிச்சை என்ன?
குறித்த நிலை கடுமையாக மாறும் போது போதுமான ஓய்வு மற்றும் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். மேலும் இன்ஹேலர், இருமல் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாசு, புகைப்பிடித்தல் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். வெளியே செல்லும் போது முகமூடி அணிவதுடன், கால்களுக்கு காலுறை அணிவது அவசியமாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |