தயிரையும் மீனையும் ஒன்னா சாப்பிட்டா வெண்குஷ்டம் வருமா? மருத்துவ விளக்கம்
பொதுவாகவே பாலை போன்றே தயிரும் உடல் ஆராக்கியத்துக்கு பெரிதும் துணைப்புரிக்கின்றது. ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் சுவைக்காகவும் உலகம் முழுவதும் தயிரை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.
தயிர் பல்வேறு சமையலிலும் கூட சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. தயிரில் உடலுக்கு நன்மை விளைவிக்க கூடிய பாக்டீரியாக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
மேலும் புரதம் நிறைந்த உணவாகவும் காணப்படுகின்றது. தயிர் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்ற போதிலும் தயிருடன் மீனை சேர்த்து சாப்பிடுவதால், வெண்குஷ்டம் ஏற்படும் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது.
குறித்த விடயத்தில் இருக்கும் உண்மை தன்மை குறித்து, டாக்டர் அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
விட்டிலிகோ என்றால் என்ன ?
முதலில் விட்டிலிகோ என்பது ஒரு ஆட்டோ இம்யூன் நோய். அதாவது பொதுவாக நமது சருமத்திற்கு என்று ஒரு நிறம் உள்ளது.இந்த நிறத்திற்கு காரணம் மெலனின் என்னும் நிறமி பொருள்.
இந்த நிறமியை மெலனோசைட் என்னும் செல்கள் தான் உற்பத்தி செய்கின்றன. ஆனால் விட்டிலிகோ என்னும் நிலையில், நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இந்த மெலனோசைட் செல்களை எதிரியாக கருதி அழித்துவிடும் போது, அந்த அழிக்கப்பட்ட மெலனோசைட் செல்கள் இருந்த பகுதி நிறமிழந்து வெள்ளைத்திட்டுக்களாக மாறிவிடும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீனையோ, தயிரையோ ஒன்றாக உட்கொண்டால், விட்டிலிகோ வருமா என்றால், அதற்கு அறிவியல் ரீதியில இதுவரையில் ஆதாரங்கள் எமுவும் இல்லை.
சில நேரங்களில் சில வகையான ஆட்டோ இம்யூன் நிலைமைகள் சில வகையான உணவுகளால் தூண்டப்படலாம். பொதுவாக ஆட்டோ இம்யூன் பிரச்சனைகள் உள்ளவர்களை கோதுமை, பால் பொருட்கள், நட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம்.
ஆனால் இதை வைத்து, தயிரையும், மீனையும் ஒன்றாக உட்கொள்ளக்கூடாது என்று முடிவெடுக்க வேண்டாம். மொத்தத்தில் தயிரையும் மீனையும் ஒன்றாக உட்கொண்டால் விட்டிலிகோ வரும் என்பதில் எந்தவிதமான அறிவியல் உண்மையும் இல்லை. தாராளமாக இரண்டையும் சேர்த்து சாப்பிடலாம்" என்று டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
ஆனால் தயிரோடு மீன் சேர்த்து சாப்பிட்டால், இவை இரண்டின் சேர்க்கை உடலின் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி அஜீரனம் மற்றும் பிற செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
