ஆஸ்திரேலியாவில் மீண்டும் வேகமாக பரவிய காட்டுத்தீ; சேதமடைந்த வீடுகள் மரங்கள்
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் வடகிழக்கு பகுதிகளில் தற்போது காட்டுத்தீ வேகமாக பரவியுள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், தீயை அணைக்க 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுவரை காட்டுத் தீயில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானதாகவும், மேலும் சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீ வேகமாக பரவுதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.