சாக்லேட் வாங்கித் தர மறுத்த கணவர்! விரக்தியில் உயிரை விட்ட மனைவி
கணவர் சாக்லேட் வாங்கி தராத விரக்தியில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி தற்கொலை
பெங்களூரு அருகே உள்ள ஹன்னூர் பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவரது மனைவி நந்தினி. இருவரும் கல்லூரி காலத்திலிருந்து காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ததுடன், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கௌதம் சலூன் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் சமீப காலமாக நந்தினிக்கும் கௌதமுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்னும் காலையில் வீட்டில் சண்டையிட்டு சென்றுள்ளார்.
பின்பு கௌதமிடம் குறுஞ்செய்தி மூலம் தனக்கு சாக்லேட் வாங்கி வருமாறு நந்தினி கூறியுள்ளார். ஆனால் கௌதமிடமிருந்து எந்தவொரு பதிலும் வராததால், போான் செய்துள்ளார்.
போனையும் கௌதம் எடுக்காததால் இரவு 11 மணிக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனை அவதானித்த கௌதம் வீட்டிற்கு அலறியடித்து ஓடிய நிலையில், அதற்குள் காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று அங்கு பரிசோதனை மேற்கொண்ட போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.