கர்ப்பிணி மனைவிக்கு தூக்கமாத்திரை... மயக்கத்தில் கொடூர கணவன் அரங்கேற்றிய கேடுகெட்ட செயல்
மனைவியை நண்பர்களைக் கொண்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி எல்.ஆர்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமணி (31). இவர் சக்தி(21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜெயமணி, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த போது, சத்துமாத்திரை என்று தூக்க மாத்திரையைக் கொடுத்து, மனைவி மயங்கிய பின்பு தனது நண்பர் சுந்திரமூர்த்தியை(31) மனைவியினை வன்புணர்வு செய்வதற்கு துணையாக இருந்துள்ளார்.
பண ஆசை, மதுபோதையும் அதிகமாக தனது மற்றொரு நண்பரான மணிகண்டன்(26) என்பவருடன் மனைவியை தனிமையில் இருக்குமாறு கூறியதோடு, மிரட்டியும் உள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக்தி, கணவரிடம் 'வேண்டாம்' என அழுது புலம்பியுள்ளார். இதில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, 'நான் சொல்வதை நீ செய்யாவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்' என ஜெயமணி சக்தியை மிரட்டிய நிலையில், இது இதோடு நின்றுவிடும் என்று நினைத்து சக்தி சம்மதித்துள்ளார்.
ஆனால், ஜெயமணி இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்த நிலையில், சக்தி ஒருக்கட்டத்தில் உறுதியாக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், 'நீ ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது உனக்குத் தெரியாமல் தூக்க மாத்திரையைக் கொடுத்து எனது நண்பர் சுந்தரமூர்த்தியை உன்னுடன் வன்புணர்வு கொள்ள வைத்தேன். நான் சொல்வதை நீ கேட்காவிட்டால் அதேபோல் மீண்டும் செய்ய நேரிடும்' என அதிர்ச்சித் தகவலை சக்தியிடம் கூறி ஜெயமணி மிரட்டியுள்ளார்.
இந்த அதிர்ச்சி உண்மையைக் கேட்ட சக்தி தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த தாய் வீட்டிற்கு சென்றதோடு, நடந்த துயரங்களைக் கூறி மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் பேரில் ஆய்வாளர் ராதிகா வழக்குப்பதிவு செய்து ஜெயமணி, நண்பர்கள் சுந்தரமூர்த்தி, மணிகண்டன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
