எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி.. ஒற்றை வார்த்தையால் உயிரை விட்ட கணவன்; வெளியான சோக சம்பவம்!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(27). இவருக்கு, சித்ரா என்ற பெண்ணுடன் திருமணமாகி, ஐந்து வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. பாண்டியராஜன் அவர் வசிக்கும் பகுதியில் லோடு மேனாக வேலை செய்து வந்துள்ளார்.
பாண்டியராஜனின் மனைவி சித்ரா அங்கிருக்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, பாண்டியராஜனின் மனைவி சித்ராவிற்கும் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அருண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்களது பழக்கம் பாண்டியராஜனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாண்டியராஜன் அவரது மனைவி சித்ராவை கண்டித்துள்ளார். ஆனாலும், சித்ராவோ எனக்கு அவருடன் தான் வாழ ஆசை, என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கணவன் சொல்லியும் மனைவி கேட்காததால், கடும் விரக்தியில் இருந்த பாண்டியராஜன் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அவர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த, போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.