மனைவியின் வேஷத்தை நொடியில் அம்பலப்படுத்திய கணவர்... 4 மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி
மனைவி ஒருவர் கணவரை ஏமாற்றி நாடகமாடிய நிலையில், நொடியில் கணவரிடம் சிக்கிக்கொண்ட காட்சி 4 மில்லியன் பேரை கவர்ந்துள்ளது.
பொதுவாக வீட்டில் கணவர் சாப்பிட அமர்ந்துவிட்டால், தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை கணவரை நன்றாக சாப்பிட வைக்கவே மனைவிகள் ஆசைப்படுவார்கள்.
இந்தியா போன்ற நாடுகளில் பல பகுதிகளில் அவ்வாறு தான் நடைபெறுகின்றது. கணவன் மீது அன்பை இவ்வாறு வெளிக்காட்டி வரும் மனைவிகள் கடைசியில் மிச்சம் இருந்தால் மட்டுமே தனது பசியையும் போக்கிக்கொள்கின்றனர்.
ஆனால் இங்கு மனைவி ஒருவர் தனது தட்டில் சிக்கன் துண்டுகளை அதிகமாக வைத்துவிட்டு வெளியில் பார்ப்பதற்கு குறைவாக வைத்திருப்பது போன்று காட்டியுள்ளார்.
கணவர் அதை நொடியில் கண்டுபிடித்து மூக்கை உடைத்துள்ளார். இந்த காமெடி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
The guy thought very delicately, but the woman was cunning. ?pic.twitter.com/ilpegvEdS0
— The Best (@Figensport) June 21, 2023