மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் தனிமையாக சோகத்தில் ஆ.ராசா: வைரலாகும் ஒற்றை புகைப்படம்
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தனது மனைவி புதைக்கப்பட்ட இடத்தில், தனிமையில் சோகத்தில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
கடந்த 6 மாதங்களாக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்த பரமேஸ்வரி, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த வாரத்தில் உடல்நிலை மிகவும் மோசமாகி வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை.
மிகவும் அயராத உழைப்பினால் மக்கள் அனைவருக்கும் பிடித்தமான அமைச்சராக வலம்வந்த ராஜா 2ஜி வழக்கில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டார்.
ஆம் தன்மீது வைக்கப்பட்ட குற்றத்திற்கு, எந்தவொரு வாய்தா வாங்காமல், தனக்கு தானே ஆஜராகி, தான் குற்றமற்றவர் என்று நிரூபித்து, அனைத்து ஆதாரங்களையும் துவம்சம் செய்தார்.
சாதாரண கூலித் தொழிலாளியின் மகனாக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து திமுக என்னும் மிகப் பெரிய கட்சியின் துணைப்பொதுச் செயலாளர், ஆற்றல் மிக்க நாடாளுமன்ற உறுப்பினரின் ராசாவின் பின்னே அவரது துணைவியார் பரமேஸ்வரியின் பங்கு அளவிடமுடியாததே...
தற்போது அவரது மனைவி புதைக்கப்பட்ட இடத்தில், ராசா தனியாளாய் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.