ரீல்ஸ் வீடியோ பார்த்த கணவர்... அந்த இடத்தில் மனைவி கொடுத்த ஷாக்
ஆந்திர மாநிலத்தில் கணவரின் பிறப்புறுப்பை மனைவி ஒருவர் பிளேடால் அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரீல்ஸ் வீடியோவால் பரிதாபம்
இன்று பெரும்பாலான நபர்கள் சமூகவலைத்தளங்களில் அதிக ஆக்டிவ்வாக இருந்து வரும் நிலையில், சில ரீல்ஸ் காணொளியினை வெளியிடவும் செய்கின்றனர்.
இதற்காக சிலர் ஆபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கவும் செய்கின்றனர். ஆனால் இங்கு கணவர் ஒருவர் தனது முன்னாள் மனைவியின் ரீல்ஸ் வீடியோவை மட்டும் தான் அவதானித்துள்ளார். அதன் பின்பு நடந்த அதிர்ச்சி நம்மை வாயடைக்க வைத்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் பாபு (26), இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், முதல் மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு வரம்மா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தினக்கூலியாக வேலை செய்து வரும் இவர் கடந்த சனிக்கிழமை தனது முன்னாள் மனைவியின் ரீல்ஸ் காணொளியை ரசித்து பார்த்துள்ளார்.
இதனால் இரண்டாவது மனைவிக்கும் இவருக்கும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், ஒருகட்டத்தில் அவரின் பிறப்புறுப்பை பிளேடால் வெட்டியுள்ளார்.
அலறி துடித்த ஆனந்த் பாபுவை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |