சிலிண்டரின் அடியில் இந்த ஓட்டைகள் ஏன் இருக்கிறது தெரியுமா?
வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரில் அடியில் இருக்கும் ஓட்டைகள் பற்றி இன்னும் 99 விதத்தினருக்கு தெரியாது.
சிலிண்டர் ஓட்டைகள்
நமது வாழ்கை வாழ்வதற்கு பல பொருட்கள் இந்த காலத்தில் தேவைப்படுகின்றது. அதில் அதிகமான மக்கள் பயன்படத்தும் ஒரு பொருளாக சமையலுக்கு பயன்படும் சிலின்டர் உள்ளது.
உலகத்தில் உள்ள பெரும்பாலான மகக்களுக்கு சிலிணடர் இல்லை என்றால் சமைக்கவே முடியாது. ஏனென்றால் சூழல் அந்த மாதிரி அமைந்திருக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் இருக்கும் சின்ன சின்ன விடயங்கள் பற்றி நாம் கவனிப்பதில்லை.
அதே பேல தான் பேஸ் சிலிண்டரின் அடியில் இருக்கும் சில ஓட்டைகளும். அதை நீங்கள் முழுமையாக கவனித்திருக்கிறீர்களா? நிச்சயமாக இருக்காது.

பலருக்கும் கேஸ் சிலிண்டர் மேல் உள்ள ரெகுலேட்டர் பற்றி தான் தெரியும். ஆனால், ஒரு சிலிண்டரின் அடிப்பகுதியை நாம் பெரும்பாலும் கவனித்திருக்க மாட்டோம். நம் வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) உள்ளது.
இது முக்கியமாக இரண்டு வாயுக்கள், புரொப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் கலவையாகும். இந்த வாயு உயர் அழுத்தத்தில் திரவ வடிவில் ஒரு உருளையில் சேமிக்கப்படுகிறது.

எஃகு மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட வீட்டு சிலிண்டர்களில் பொதுவாக சுமார் 14.2 கிலோ எல்பிஜி இருக்கும். சிலிண்டரின் விலை அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் அல்லது சந்தை விலைகளை அடிப்படையாக வைத்து மாறுபடும்.
சிலிண்டர்களில் சிவப்பு நிறம் இருப்பதற்கு காரணம் எல்பிஜி எரியக்கூடியது என்பதால், முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்கும் வகையில், பொதுமக்களுக்கு சிவப்பு நிறத்தில் தயாரித்து வழங்கப்படுகின்றது.
மேலும், சிவப்பு தூரத்திலிருந்து தெளிவாகத் தெரியும். இது அவசர காலங்களில் அல்லது கிடங்குகளில் சிலிண்டர்களை அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது.

சிறிய துளைகள் ஏன் உள்ளது?
இந்த துளைகளின் முக்கிய நோக்கம் காற்று சுழற்சியை மேம்படுத்துவதும், ஈரப்பதம் குவிவதைத் தடுப்பதும் ஆகும். சிலிண்டர் தரையில் வைக்கப்படும் போது, ஈரப்பதம் ஓடுகள் அல்லது தரையை அடையும் வாய்ப்பு உள்ளது.
அந்த ஈரப்பதம் பெரும்பாலும் சிலிண்டரின் அடிப்பகுதியில் இருக்கும். இது காலப்போக்கில் துருப்பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், இந்த துளைகள் இருப்பதால் காற்று ஓட்டம் எளிதாக இருக்கும்.
இதனால் ஈரப்பதம் வேகமாக உலர்த்தப்படுகிறது. இதன் காரணமாக தான் சிலிண்டரின் அடியில் ஓட்டைகள் வைக்கபட்டுள்ளது.