Safety Pin-ல் இந்த துளை ஏன் இருக்கிறது தெரியுமா?
நீங்கள் எப்போதாவது Safety Pin இன் பின் பக்கத்தில் ஒரு வட்டமான துளை இருப்பது ஏன் இருக்கிறது என்பதற்கான காரணம் தெரியுமா அதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Safety Pin துளை
Safety Pin (ஊக்கு) வரலாறு மிகவும் பழமையானது. லத்தீன் மொழியில், இது ஃபைபுலே (fibulae) என்று அழைக்கப்படுகிறது. இது வெண்கல யுகத்தில் (Bronze Age) ஐரோப்பாவில் தோன்றியது என்று கூறப்படுகிறது.
இந்த ஊக்கை 1849இல் வால்டர் ஹன்ட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். ஒரு கம்பியை வளைத்து இந்த ஸ்பிரிங்-லோடட் அமைப்பை உருவாக்கினார். இப்படி இதை உருவாக்கும் போது அந்த நேரத்தில் இதற்கு இரண்டு முக்கிய முறைகள் பயன்படுத்தப்பட்டதாம்.

ஒன்று, வடக்கு ஐரோப்பிய முறை. இது ஊசிக்கு இரண்டு தனித்தனி பாகங்களைக் கொண்டு செய்யபட்டது. அதற்கு ஒரு ஸ்பிரிங் இல்லை. ஒரு ஊசியில் ஒரு துளை இருந்தது.
மற்றைய ஊசி அந்த துளை வழியாகச் சென்று கொக்கியில் இணைக்கப்பட்டது. இது மிகவும் சிக்கலான வடிவமைப்பாக இருந்தது. மற்றொன்று, மத்திய ஐரோப்பிய, கிரேக்க மற்றும் இத்தாலிய பாணிகளில் பயன்படுத்தப்படும் ஊசிகள் நவீன பாதுகாப்பு ஊசிகளைப் போலவே இருந்தன.
ஊசி நடுவில் ஒரு ஸ்பிரிங் கொண்ட ஒற்றை கம்பியால் ஆனது. இது நெகிழ்வுத்தன்மையை கொண்டிருந்தது. கம்பியின் ஒரு முனை கூர்மையாகவும் மறுமுனை வளைந்தும் இருந்தது.

இதனால் கூர்மையான முனை செருகப்படும். நீங்கள் எப்போதாவது Safety Pin-உற்றுப் பார்த்திருந்தால், அதன் அமைப்பு மற்றும் வேலை முறை மிகவும் வித்தியாசமாக இருப்பதைக் பார்த்திருப்பீர்கள்.
இது இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை அதன் செயல்பாட்டிற்கு அவசியமானவை. ஊக்கின் அடிப்பகுதியில் உள்ள கம்பி ஒரு வளையம் அல்லது சுருளாக வளைக்கப்பட்டுள்ளது.

இந்த துளை ஒரு ஸ்பிரிங் போல செயல்படுகிறது. இந்த ஸ்பிரிங் பின்னில் பதற்றத்தை உருவாக்குகிறது. முள் முனையை உறுதியாகப் பிடித்துக் கொள்கிறது. இந்த பதற்றம் இல்லாமல், முள் மீண்டும் மீண்டும் திறக்கும், இது காயத்தை ஏற்படுத்தும்.
ஹன்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பான சேப்டி பின் மூலம் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, கம்பியால் விரல்களில் ஏற்பட்ட காயமும் தவிர்க்கப்படுவதால், இதற்கு சேஃப்டி பின் என்று பெயர் வந்தது.
பெண்கள் புடைவை முதல் சல்வார் கமீஸ் வரை அனைத்திற்கும் சேப்டி பின்னை பயன்படுத்துகின்றனர். காயம் ஏற்படாமல் பாதுகாப்பதற்காகவே இது சேப்டி பின் என்று அழைக்கப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |