அரிசியை ஊற வைத்து சமைத்து பாருங்க... ஏகப்பட்ட நன்மையினை பெறுவீங்க
அரிசியை ஊற வைத்து சமைப்பதற்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தமிழர்களின் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தில் அரிசி உணவு பொருள் மட்டுமின்றி, நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கின்றது.
அனைத்து வேளைகளிலும் அரிசி உணவு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அரிசியை ஊற வைத்து சமைப்பது முன்னோர்கள் செய்த ஒரு பழக்கமாகும்.
ஆனால் இன்றைய நவீன காலத்திலும் அதனை பலரும் செய்து வருகின்றனர். அரிசியை ஊற வைத்து சமைப்பதால் அதிக ஊட்டச்சத்து கிடைப்பதுடன், உடல் ஆரோக்கியத்தினை அளிக்கின்றது.

அரிசியை ஊற வைக்க காரணம்?
வயலில் விளையும் நெல்லில் அதிகமான பூச்சிகள், மருந்துகள் வெளிப்புறத்தில் படுவது இயல்பாகும். உள்ளே இருக்கும் அரிசிக்கு வெளியே இருக்கும் உமி பாதுகாப்பாக இருக்கின்றது. அரிசியை பாதுகாக்க இயற்கையாகவே பைட்டிக் ஆசிட் என்ற அமிலம் இருப்பதால், இதனை நேரடியாக சமைக்கும் போது சத்துக்களை உரிஞ்சுவதற்கு தடையாக இருக்கும். ஆதலால் அரிசியை ஊற வைத்து சமைக்கின்றனர்.
செரிமான எளிதாக இருப்பதால் அரிசியை ஊற வைத்து சமைக்கின்றனர். வெளியில் உள்ள கடினத்தன்னை குறைந்து மென்மையாக மாறுவதால், செரிமானத்திற்கும் எளிதாகவே இருக்கின்றது.

அரிசியை ஊற வைக்கும் போது, அதிலுள்ள சத்துக்களின் திறனும் அதிகரிக்கின்றது. எலும்புகள் வலுவாவதுடன், தசைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றது.
அரிசியை ஊற வைத்த சமைக்கும் போது சமைக்கும் நேரம் குறைந்துவிடுகின்றது. அதாவது மிக சீக்கிரம் அதனை வேக வைக்க முடியும்.

சுவை மற்றும் மணம் மேம்படுவதுடன், சமைக்கப்படம் சாதம் மென்மையாகவும், நன்றாகவும் இருக்குமாம். இதற்காகவே முன்னோர்கள் அரிசியை ஊற வைத்து சமைக்கின்றனர்.
வயிற்றில் புண், எரிச்சல், அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் ஊற வைத்த அரிசியில் சமைப்பதால் இதன் தீவிரம் குறைகின்றது. நீண்ட கால வயிற்சு பிரச்சனைக்கும் தீர்வாக அமைகின்றது.

ஊற வைத்த அரிசி உணவானது உடலுக்கு குளிர்ச்சியையும், நீடித்த ஆற்றலையும் வழங்குவதாக கூறப்படுகின்றது. மேலும் ரத்த சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்துவதால், நீண்ட நேரம் ஆற்றலையும் அளிப்பது ஆய்வில் உறுதி செய்யப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |