நீரிழிவு நோயாளிகள் ஏன் பாகற்காய் சாறு குடிக்க வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாறு குடிப்பது மிகவும் நல்லது எனப்படுகின்றது. இதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம்.

நீரிழிவு நோய்
பாகற்காயில் பி-இன்சுலின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது. இயற்கையாகக் காணப்படும் இந்த சேர்மம், நம் உடலில் உள்ள இன்சுலினைப் போலவே செயல்படுகிறது.
இது அதிகரித்த இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க நேரடியாக உதவும் எனப்படுகின்றது. பாகற்காயில் சாரன்டின் மற்றும் வைசின் என்ற பதார்த்தம் உள்ளது. இதில் சாரன்டின் எனப்படும் சேர்மம் இரத்தச் சர்க்கரை அளவை சீராகக் குறைந்த மட்டத்தில் பராமரிக்க உதவுகிறது.

அதே சமயம், வைசின், உடலில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைத் தடுத்து, சாப்பிட்ட பிறகு இரத்தச் சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் உயர்வுகளைத் தடுக்க உதவுகிறது.
உங்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் இருந்தால் உடலின் செல்களால் இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்த முடியாது.
இதற்கு நாம் பாகற்காய் சாறு எடுத்துக்கொண்டால் அது செல்களை இன்சுலினுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றி, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அவை எளிதாக உறிஞ்சி ஆற்றலாக மாற்ற உதவும்.

பாகற்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் இன்சுலினை அதிகளவில் உற்பத்தி செய்வற்கு உதவும்.
இது உடலின் இயற்கையான இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
பாகற்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |