சிவலிங்கத்திற்கு புடவை சாத்தும் மக்கள் - அதிசய கோவிலின் பின்னணி காரணம் என்ன?
சிவ லிங்கத்திற்கு படவை சாத்தி வழிபடும் மக்கள் ஏன் அப்படி வழிபடுகின்றனர் என்பதற்கான பின்னணி காரணத்தை பார்க்கலாம்.
பின்னணி காரணம்
நாம் பல ஆன்மீக விசித்திர வழிபாடுகளை பார்த்திருப்போம். சில இந்து கோவில்களில் மர்மங்கள் விநோத வழிபாடுகள் நிறைந்திருக்கும். இதுபோன்ற வழிபாடுகள் வட இந்தியா பக்கங்களில் பரவலாக காணப்படும்.
பிருந்தாவனத்தின் புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்குவது வம்சிவட் பகுதியில் அமைந்துள்ள கோபேஷ்வர் மகாதேவ் மந்திர். இங்குள்ள மக்கள் அந்த கோவிலின் சிவலிங்கத்திற்கு புடவை சாத்தி வழிபடுகின்றனர்.

இதுபோன்ற விநோத செயல்கள் இந்த கோவிலில் இடம்பெறும் என புராணக்கதைகளில் கூறப்பட்டுள்ளது. ஒரு பெளர்ணமி இரவில் யமுனை கரையில் பகவான் கிருஷ்ணர் கோபியர்களுடன் ராஸ லீலா ஆடிக் கொண்டிருந்தார்.
இந்த நடனம் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றிணையும் ஆன்மிகத் திருவிழா ஆகும். இந்த மகிமையை அறிந்த சிவபெருமான் அதில் பங்கேற்க ஆசைப்பட்டார்.
ஆனால் வம்சிவட்டிற்கு வந்த போது, பிருந்தாவனத்தின் காவலாளியான பிருந்தாதேவி அவரைத் தடுத்து, "இது ராஸ லீலை, கிருஷ்ணரைத் தவிர வேறு ஆண்கள் பங்கேற்க முடியாது" என்றார்.

அந்த வார்த்தை சிவபெருமானுக்கு வருத்ததை தந்தது. அவர் அப்படியே நுழைவாயில் அமர்ந்தார். சிவபெருமானின் அந்த ஏக்கம், அந்த வருத்தம், அந்த ஆழ்ந்த பக்தி அனைத்தும் பிருந்தாதேவியின் உள்ளத்தைத் தொட்டது.
பிருந்தாதேவி சிவபெருமானிடம், "குசும் சரோவரில் நீராடி வாருங்கள்" என்று கூறினார். சிவபெருமான் அந்த தீர்த்ததில் மூழ்கி எழுந்தார். அப்போது என்ன ஒரு அதிசயம்.
அவர் அப்போது ஆண் வடிவில் இல்லாமல் பெண் வடிவில் மாறி இருந்தார். அவர் அழகிய கோபியர் ரூபத்தை பெற்ற அதிசயம் நிகழ்ந்தது. இதனால் பரிபூரண பக்தி நிறைந்த கோபியர்களில் ஒருவராக மாறி இருந்தார். அந்த மாற்றம் வெறும் புற தோற்றம் அல்ல; அது ஆன்மாவின் லய நிலை எனப்பட்டது.

இதன் பின்னர் சிவபெருமான் ராஸ லீலையில் கலந்து கொண்டார். இதன் பின்னர் ராஸ லீலையில் கலந்து கொண்டார். கிருஷ்ணருடன் நடனமாடி பரமானந்தத்தில் மூழ்கினார்.
அந்த நேரத்தில் கிருஷ்ணர் அவரை அன்போடு "கோபேஷ்வர்" என்று அழைத்தார். கோபியர்களின் ஈசன் என்று இதற்கு பொருள். இந்த காரணத்தினால் சிவபெருமான் "கோபேஷ்வர் மகாதேவ்" என்ற திருநாமத்தை பெற்று கொண்டார்.
லிங்கத்திற்கு புடவை சாத்த உன்ன காரணம்?
புராணக்கதைகளில் உள்ள இந்த நிகழ்வின் நினைவாக அந்தத் தலத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு இன்றும் புடவை அணிவிக்கப்படுகிறது. சிவன் கோபியர் ரூபத்தில் ராஸ லீலையில் கலந்து கொண்டதை நினைவூட்டும் மரபாக இது தொடர்ந்து அங்குள்ள மக்கள் செய்கிறார்கள். இங்குள்ள மக்கள் சிவபெருமான் லயத்திற்கு சென்று எப்போதும் உணவருந்தி விட்டு வருகிறார் என நம்புகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |