இந்த மாதங்களில் பிறந்தவர்களுக்கு பணப்பிரச்சினை ஒருபோதும் ஓயாது! ஏன்னு தெரியுமா?
பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தை போன்றே பிறப்பு மாதமும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் பணத்தட்டுப்பாடு இருந்துக்கொண்டே தான் இருக்கும்.இவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்கள் பணம் இல்லாத நிலையிலேயே தான் இருப்பார்களாம்.

அப்படி வாழ்க்கை முழுவதும் பணப்பிரச்சினையை அனுபவிக்கும் நபர்கள் பெரும்பாலும் எந்த மாதங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்பது குறித்தும் அதற்காக காரணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள் இவர்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் வித்தை தெரியும் அளவுக்கு அதை சரியாக முறையில் சேமிக்கவும் சம்பாதித்த பணத்தை இரைட்டிப்பாக்கவும் தெரிவது கிடையாது.
இவர்கள் எதிர்காலம் பற்றிய அக்கறை அற்றவர்களாக இருப்பது இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் பணப்பிரச்சினை இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
மேலும் இவர்கள் அதிக இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பதால் மற்றவர்களுக்காக அதிகம் பணம் செலவிடும் குணத்தையும் கொண்டிருப்பார்கள்.
ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் ஆடம்பரமாக செலவழிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்கள் நினைத்த பொருட்களை நினைத்த நேரத்தில் வாங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.
குறிப்பாக சந்தைக்கு புதிதாக எந்த புதிய போன் வந்தாலும், புதிய வாகனம் வந்தாலும் அதை வாங்க முதல் வரிசையில் நிற்பதும் இவர்கள் தான் அதற்கு பணம் செலுத்த முடியாமல் வாழ்க்கை முழுவதும் போராடுவதும் இவர்கள் தான்.
தங்களின் விருப்பப்படி வாழ்வதற்காக இருக்கும் பணத்தை செலவழிக்க ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். அவர்களின் இந்த குணம் இவர்கள் வாழ்வில் அதிகம் பணப்பிரச்சினையை சந்திக்க முக்கிய காரணமாக இருக்கும்.
செப்டம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமானவர்களாகவும் சிக்கமானவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் மற்றவர்களுக்கு பரிசு கொடுக்கும் விடயத்தில் சேமித்த மொத்த பணத்தையும் இழந்துவிடுவார்கள்.
இவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும், ஏன் தங்களுக்குக்கூட, சிறந்த பொருட்களை பரிசளிக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருப்பதால், வாழ்வில் அதிகம் பணப்பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |