உப்ப ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது? தெரிஞ்சிக்கோங்க
உலகில் அனைவரும் பாகுபாடு இன்றி பயன்படுத்தும் ஒரு பொருள்தான் உப்பு இது இல்லாத வீடே கிடையாது என்றால் மிகையாகாது. பொதுவாக தமிழர்களை பொருத்தவரையில் இது தெய்வமாக பார்க்கப்படுகின்றது.
உப்பு தொடர்பில் பல கருத்துக்கள் பல விதமாக இருந்தாலும் எமது முன்னோர்கள் உப்பு தொடர்பில் பயன்படுத்திய சில வழிமுறைகளில் ஒழிந்திருக்கும் நம்மில் பலரும் அறியாத அறிவியல் உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நமது முன்னோர்கள் பொதுவாகவே உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்புகாத வகையில் வைக்க வேண்டும் மற்றும் உப்பை அடுப்புக்கு அருகில் வைக்கக் கூடாது என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி வைத்திருக்கின்றார்கள் இதற்கு என்ன காரணம்? இது குறித்து எப்போதாவது யோசித்தது உண்டா?
உப்பை களஞ்சியப்படுத்தும் பாத்திரம்...
நமது முன்னோர்களைப் பற்றி சிந்திக்கும் போது வியப்பாக இருக்கிறது அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்தையும் அறிவியல் ரீதியாக துள்ளியமாக கணித்தவர்கள் இவர்கள் தான். உப்பை வெறுமனே சுவைக்காக மாத்திரம் பயன்படுத்துவது கிடையாது இதில் உடலுக்கு தேவையான அயோடின் காணப்படுகின்றது.
இதற்காகவே உணவில் உப்பு அவசியமாகின்றது. இதன் சுவை காலப்போக்கில் எமக்கு இன்றியமையாததாக மாறிவிடுவதனால்
இதனை சுவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்செல்லாத வகையில் வைக்க காரணம் உப்பில் காணப்படும் அயோடின் ஒரு வேதிப்பொருள் இது உலோக பாத்திரங்களுடன் தாக்கம் புரியக்கூடியது எனவே இதனை வேறு உலோகத்துடன் தாக்கம் புரியாத வகையில் களஞ்சியப்படுத்த வேண்டும்.
உப்பை களஞ்சியப்படுத்தும் பாத்திரம் ஒளி உட்புகாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்கு காரணம் சூரிய வெப்பத்தில் அயோடின் அழிவடையக்கூடியது என்பதனால் தான்.
உப்பு பாத்திரத்தை அடுப்பின் அருகில் வைக்க கூடாது என குறிப்பிட்டமைக்கும் இதுவே காரணம் அயோடின் வெப்பத்தில் அழிவடையக்கூடியது உப்பில் அயோடின் அழிவடைந்த பின்னர் உணவில் சேர்ப்பது பிரையோசணம் அற்றது.
சமையலின் போதும் கூட உப்பை உணவு ஆறிய பின்னரே சேர்க்க வேண்டும் என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை வெப்பம் தணிந்த பின்னர் உப்பை சேர்க்கும் போது மட்டுமே உப்பு சேர்பதன் உண்மையான பலன் கிடைக்கிறது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |