கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் ஜானகி வாடகை வீட்டில் வசிக்க என்ன காரணம்?
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகியின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜானகியின் சொத்துமதிப்பு
60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ். ஜானகி, தனது காலத்தில் முன்னணி பாடகியாக இருந்தார்.
ஊடகத் தகவல்களின்படி, எஸ். ஜானகியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.537 கோடி என கூறப்படுகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

அவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
சென்னையின் முக்கியப் பகுதிகளில் வாங்கப்பட்ட நிலங்கள் தற்போது நூற்றுக்கணக்கான கோடிகளை எட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இவ்வளவு சொத்துகள் இருந்தும் அவர் தனது இறுதி நாட்களில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
என்ன காரணம்?
1938ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த எஸ். ஜானகி, திருமணத்திற்குப் பிறகு சென்னையில் குடியேறினார்.
கணவர் மற்றும் மகன் மரணத்திற்கு பிறகு மைசூரில் வசித்த ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்.
மைசூரில் ஒரு ரசிகரின் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்தார். போகடி பகுதியில் உள்ள வீட்டில் ரசிகர் பவ்யா அவரை கவனித்து வந்தார்.
இதனைதொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஒரு பண்ணை வீட்டை வாங்கியிருந்தாலும், இறுதி வரை வாடகை வீட்டில்தான் வசித்தார்.
கடைசி இரண்டு ஆண்டுகளில் ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்திய எஸ். ஜானகி, மைசூரில் உள்ள பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தார்.
இந்நிலையில், அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் உயிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.