சிம் கார்டு ஏன் பக்கவாட்டில் வெட்டப்பட்டுள்ளது? இது தான் இரகசியம்
நாம் மொபைல் போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளில் பக்கவாட்டில் ஒரு துண்டு வெட்டப்பட்டிருக்கும் இதற்கான காரணத்தை அறியலாம்.

மொபைல் போன்
இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைபேசியைப் பயன்படுத்துகிறார்கள். மொபைல் பேன் பயன்படுத்தினால் நாம் கட்டாயமாக சிம் கார்டு பயன்படுத்த வேண்டும்.
அந்த சிம் கார்டில்ஒரு மூலை எப்போதும் வெட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் இது ஏன் இப்படி வெட்டப்பட்டு்ளது என்பதை யாராவது அறிய முடியுமா?
ஏன் இப்படி வெட்டப்பட்டுள்ளது இது வடிவமைப்புக்காக மட்டும்தானா, அல்லது இதற்குப் பின்னால் ஏதாவது தொழில்நுட்பக் காரணம் உள்ளதா? என்பதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

காரணம்
சிம் கார்டின் ஒரு மூலையை வெட்டுவதன் நோக்கம், அதைத் தொலைபேசியில் சரியான திசையில் செருகுவதற்காகும்.
சிம் கார்டு எல்லாப் பக்கங்களிலும் சமமாக இருந்தால் மக்கள் மொபைல் போனில் அதைத் தலைகீழாகவோ அல்லது தவறான திசையிலோ சொருக நேரிடும். இது சிம் கார்டை சேதப்படுத்துவதோடு நெட்வேர்க் பிரச்சனைகளையும் கொண்டு வரும்.
இதற்காக தான் சிம் கார்டில் மூலைப்பகுதியில் ஒரு தண்டு வெட்டப்படுகின்றது. இது சிம் கார்டு ஸ்லாட்டில் இறுக்கமாகப் பொருந்துவதை உறுதிசெய்து, பிழை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

தொழிநுட்பம் மூலம் இந்த வகையான வடிவமைப்பு 'கீயிங்' என்று அழைக்கப்படுகிறது. கீயிங் என்பது ஒரு சாதனம் அல்லது பாகத்தை ஒரே ஒரு வழியில் மட்டுமே பொருந்தும்படி வடிவமைப்பதாகும்.
சிம் கார்டில் உள்ள வெட்டுப்பகுதியும் இதே கொள்கையின் அடிப்படையிலேயே செயல்படுகிறது. இந்தச் சிறிய மாற்றம் பயனருக்கு மிகுந்த வசதியை அளிப்பதோடு, சாதனத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

தற்போது சிம் கார்டுகளின் அளவுகளும் மாறியுள்ளன. ஆரம்பத்தில், மினி சிம்கள் என்று அழைக்கப்படும் பெரிய சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.
பின்னர், நவீன ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம்கள் மற்றும் நானோ சிம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அளவுகளில் மாற்றங்கள் இருந்தபோதிலும், சிம் கார்டின் மூலையில் உள்ள அந்த வெட்டப்பட்ட பகுதியில் மாற்றமில்லை.
எனவே அடுத்த முறை நீங்கள் சிம் கார்டை பார்க்கும் போது இந்த வெட்டப்பட்ட பகுதி வெறும் வடிவமைப்பு மட்டுமல்ல, அது மொபைல் பயன்பாட்டை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் ஒரு புத்திசாலித்தனமான தொழில்நுட்பத் தீர்வு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |