மின்கம்பிகளில் அமர்ந்தாலும் பறவைகளுக்கு மின்சாரம் தாக்காதது ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே நாம் அனைவரும் மின் வயர்களின் அருகில் செல்வதற்கு கூட மிகவும் பயப்படுவது வழக்கம்.
ஆனால் மின் வயர்களில் ஏராளமான பறவைகள் மிகவும் சாதாரணமாக அமர்திருப்பதை கண்டிருப்பீர்கள் ஏன் அந்த பறவைகளுக்கு மின்சாரம் தாக்கவில்லை என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

அதே நேரம் வௌவால்கள் மற்றும் அணில்கள் மின்சாரம் தாக்கி வீதிகளில் இறந்து கிடப்பதையும் கண்டிருப்போம். அதற்கு ஏன் மின்சாரம் தாக்கியுள்ளது? பறவைகளை ஏன் தாக்க வில்லை என்பது குறித்த தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
[MM3NDH ]
உண்மையில் மின்னியக்கம் எனப்படுவது ஏற்றம் பெற்ற எலக்ட்ரான்களின் இயக்கமே ஆகும். எலக்ட்ரான்கள் கம்பி வழியாக நகர்ந்து மின்சாரம் வடிவில் மின்வாதனங்களை இயக்குகின்றது.
குறிப்பாக மின்சாரம் 2 கொள்கையில் 2 வயர்களாக இயங்கும். மின்சாரம் ஓப்பன் சர்க்யூட், க்ளோஸ் சர்க்யூட் என செயல்படும். அதாவது நேர் ஏற்றம் மற்றும் மறை ஏற்றம் என்பன ஒரே நேரத்தில் தொடர்பு படும் பட்சத்தில் மாத்திரமே மின்சாரம் உருவாகும்.

ஒரு பறவை மின்சார கம்பியின் ஒரு கம்பியை மட்டும் தொட்டால் அது ஓப்பன் சர்க்யூட்டாக தான் இருக்கும். அதனால் எலக்ட்ரான்களின் இயக்கம் இடம்பெறாது.
ஆனால் 2 கம்பிகளை ஒரே நேரத்தில் தொடும் பட்சத்தில் க்ளோஸ் சர்க்யூட்டாக மாறும் போாது எலக்ட்ரான்களின் இயக்கம் இடம் பெற ஆரம்பிக்கின்றது இதனால் மின்சாரம் தாக்குகின்றது.

பொதுவாக பறவைகள் அளவில் சிறியதாக இருப்பதனால் ஒரே ஒரு கம்பியில் தான் அமர்ந்து பறக்கும். அதனால் தான் பறவைகளை மின்சாரம் தாக்குவது கிடையாது.
ஆனால் வௌவ்வால்கள் அளவில் பெரியதாக இருக்கும் மற்றும் அணிலின் வால் நீண்டதாக இருக்கின்றது.

அதனால் மின் கம்பிகளில் அவை அமர்ந்தால் 2 கம்பிகளை ஒரு சேர தொட்டு விடும். இதனால் மின்சாரம் தாக்கி உயிரிழந்து விடுகின்றன்.
இந்த விடயம் மனிதர்களுக்கும் பொருந்தும் எனவே மின் வயர்களின் அருகில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        