உள்ளங்கையால் மூக்கை மூடி வேட்டையாடும் துருவக் கரடிகள்... இதற்கு காரணம் என்ன தெரியுமா?
இன்று பன்னாட்டு துருவக்கரடி தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், துருவக் கரடிகளைக் குறித்து தெரியாத பல விடயத்தினை தெரிந்து கொள்ளலாம்.
பனிக் கரடி
புவி வெப்பமடைதல் காரணமாகப் பனி உருகுவதால் துருவக் கரடியின் எண்ணிக்கையில் ஏற்படும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
பனிக்கரடி, துருவக் கரடி என்றழைக்கப்படும் இக்கரடி, நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் வெண்ணிறக் கரடி இனமாகும்.
image: shutterstock
ஆர்ட்டிக் மாக்கடல் என்று இந்த உறைபனிப் பகுதியைக் கூறுவதால், இக்கரடியை வெண் கடற்கரடி என்றும் கூறுவதுண்டு.
ஒரு வளர்ந்த ஆண் கரடியானது 400 முதல் 600 கிலோ எடை இருக்குமாம். அதுவே பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோ எடையாக இருக்கும்.
image: shutterstock
ஆச்சரியமான புதிய தகவல்
இளவேனிற் காலத்தில் தனது இனப்பெருக்கத்தினை இதன் கர்ப்பக்காலம் 240 நாட்கள் ஆகும். இரண்டு குட்டிகளை பெற்றெடுக்கும் கரடிகள், அது குளிர் தாங்காமல் இருக்கும் என்பதால், விரைவில் குண்டாகவும், கொழுப்பு சத்துடனும் சீக்கிரமாக வளர்க்கின்றது.
இயற்கையிலேயே இக்கரடியின் தாய்ப்பால் மிகச் செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது.
இனப்பெருக்கக் காலங்களில் பெண் கரடியுடனும், குட்டிகளுடனும் இருந்தாலும், பனிக்கரடிகள் பொதுவாக, தனியாக வாழும் விலங்குகள் வகையைச் சேர்ந்தவை.
image: shutterstock
இதன் பிரதானமான உணவு சீல் ஆகும். திமிங்கிலம் போன்ற மிகப்பெரிய உணவு கிடைத்தால், 20 முதல் 30 பனிக்கரடிகள் கூட்டமாக வந்து சாப்பிட்டு முடிக்குமாம்.
இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடுவதில் வல்லதாக இருக்கும் இக்கரடிகள், வேட்டையாடும் போது தனது உள்ளங்கையால் மூக்கை மூடிக் கொள்ளுமாம்.
இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கருப்பாய் இருந்து காட்டிக் கொடுத்து விடும் என்பதால், மூக்கை மறைத்து பனிப் படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னை தெரியாதவாறு வேட்டையாடுமாம். உலகில் ஏறத்தாழ 20000 பனிக் கரடிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |