கடற்கொள்ளையர்கள் ஒரு கண்ணை மூடி இருப்பது ஏன்னு தெரியுமா?
உலகில் நாம் இயல்பானது என நினைக்கும் ஒவ்வொரு விடயத்துக்கும் பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். ஆனால் நாம் பல சந்தர்ப்பங்களில் அது குறித்து சிந்திப்பதில்லை.
அந்தவயைில் கடல் கொள்ளையர்கள் எப்போதும் ஒரு கண்ணை மூடியவாறு இருப்பார்கள். இதனை பல திரைப்படங்களிலும் கூட நாம் பார்திருப்போம்.
கடற்கொள்ளையர்கள் ஏன் இவ்வாறு ஒரு கண்ணை மாத்திரம் எப்போதும் மூடி வைத்திருக்கின்றார்கள் என்று சிந்தித்திருக்கின்றீர்களா? அதற்கான அறிவியல் காரணம் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
என்ன காரணம்?
கடற்கொள்ளையர்கள் கப்பலில் கொள்ளையிடுகின்றனர் இந்த சந்தர்ப்பத்தில் கப்பலில் மேல் தளத்தில் சூரிய வெளிச்சம் இருக்கும் ஆனால் கப்பலில் கீழ் தளம் இருட்டாகவே இருக்கும்.
பொதுவாக மனிதர்களின் கண்களால் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும்போது தெளிவாக பார்க்க முடிகின்றது ஆனால் வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு செல்லும் போது உடனே நம்மால் அதனை பார்க்க முடிவதில்லை.
காரணம் வெளிச்சத்திலிருந்து இருட்டான இடத்திற்கு செல்லும்போது நம் கண்களில் சுரக்கும் ‘போட்டோ பிக்மெண்ட்’ சுரக்க சுமார் 25 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும் அது வரையில் நம்மால் அங்கிருக்கும் எதையும் அவதானிக்க முடியாது.
அதனால் தான் கடற்கொள்ளையர்கள் எப்போதும் ஒரு கண்ணை வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் மற்ற கண்ணை இருட்டில் பார்ப்பதற்கும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தான் ஒரு கண்ணை எப்போதும் மூடியே வைத்திருக்கின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |